Tuesday, December 16, 2008

அன்ணை இல்லம்

அழகாய் வீடு கட்டி
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....

Monday, December 8, 2008

தாயே....!

தாயே....! நீ எனக்கு
பாலூட்டினாய்.....
தாலாட்டினாய்......
சீராட்டினாய்......
ஓவ்வெரு முறையும் நான் வெற்றி
படிகட்டுகளில் ஏற முயன்று
தோல்வி படிகளில் துவண்டு விழுந்தபோதெல்லாம்
உன் வேதனைகளை வெளிக்காட்டாமல் என்னை
கட்டி அனைத்து உச்சி முகர்ந்ததாலும்
இறைவனின் கருணையாலும்
என்னை வெற்றி பெற வைத்தாய் ...
உன்னைக் காப்பேன் என் உயிர் உள்ள வரை
கண்ணில் வைத்து இமைகளை போல்
இது நான் உனக்கு செய்யும்
கடமை மட்டும்மல்ல நீ எனக்காக
உன் ரத்தத்தை பாலாய் புகட்டிய
உன் தியாகத்திற்க்காவும்.....
உனக்கு பிடித்த உணவுகளை
எனக்காக நீ உண்ணாமல் ஒதுக்கியது போல்
இன்னும் பல இவற்றிக்கெல்லாம் நான் செய்வது
கடலில் கரைத்த பெருங்காயமாய் .....
இறைவா உன்னை இறைஞ்சுகின்றேன்
அவள் உயிர் உள்ளவரை என்னை உயிருடன் வாழ வை
வளமாய் நான் வாழ அல்ல அவளை வாழ வைக்க.........

Sunday, December 7, 2008

சுகம்....!

காத்திருப்பது கூட சுகமானது தான் .........
உன் வருகைக்காக காத்திருப்பதால் ............

காட்டாறு

நீ என்னை விட்டு விலகி இருக்கும் போது தான் காதல் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது நீ இருக்கும் திசை நோக்கி என்னில்லிருந்து......

நடைபிணமாய்

நான் நடைபிணமாய் இங்கு....
என் உயிர்மட்டும் உன்னை சுற்றி அங்கு......

நீண்ட இரவுகள்

இரவில்.......
உன் தொலைபேசி அழைப்புக்காக காத்திருக்கும் போதுதான்
என் இரவுகள் நீண்டு கொண்டே போகின்றது.....

காலனும் காலமும்

உன்னை.........
பிரிய மனமில்லை........
ஆனால் என்ன பண்ண......
காலனும் காலமும் தான்
நம்மை பிரிக்கின்றன.......

திராவகம்

அடிப் பெண்ணே
பிரிவு என்னும் திராவகம் வீசி பிரிகின்றாய்
அது பரவும் வேகமும் வேதனையும் சுகம் தான்..
உன்னால் நான் பெறுவதால்

சுவை

சுவையை சுவைத்து உணர்ந்தேன்...
நட்பை பழகி உணர்ந்தேன்....
காதலை உன்னை காதலித்து உணர்ந்தேன்....
வேதனையும் வலியையும் நீ என்னை பிரிந்தபோது தான் உணர்ந்தேன்.......

காந்தம்

உன்னை காணும் முன் நினைக்கின்றேன் உன்னை தழுவக்கூடாது என்று உன்னை கண்டவுடன் தழுவுகின்றேன் காந்தமாய் என்னை மறந்து..

Friday, August 29, 2008

எப்படி நான் மறக்க முடியும்

பட்டு போன என் இதயத்தை

தொட்டு போன உன் நட்பு...

இன்று காதலை காத்திருக்கும்

என் கண்ணுக்குள் பூத்திருக்கும்

உன் நினைவுகளை

எப்படி நான் மறக்க முடியும்

நினைவுகள்

உன் நினைவுகள் வாட்டியதால்

கிறுக்கிய கவிதைகளை

வாசித்தபோது தான் என்னை

நான் கிள்ளிக்கொண்டேன்.

Tuesday, July 29, 2008

அன்பு கண்ணீர்...

நான் கண்ணீர் விட்டேன் என்பதற்காக

என்னை விட்டு விலகி செல்கின்றாய்

நான் உன் அன்புக்காக ஏங்கி

கண்ணீர் விட்டேன் என்பதை ஏனோ

நினைக்க மறுக்கின்றாய்

நேசிக்கின்றேன்...

நான் உன்னை யாசித்து யாசித்து

நேசிக்கின்றேன் ... நீயோ

யோசித்து யோசித்து நேசிக்கின்றாய் பின்பு

வெறுத்து ஒதுக்குகின்றாய்

வாழ்க்கை சோலையில்!

உன் பரப்பான வாழ்க்கை சோலையில்

வாரகடைசியில் கூட

சில மணி துளிகள்தான்

என் மீது அன்பு செலுத்துக்கின்றாய்

நேரம் இருந்தால்

அகற்றப்படுகிறேன்....

நீ போட்டு வைத்த வட்டத்தினுள்

அத்துமீறி நுழைந்தல் என்னவோ

அடிக்கடி உன் இதயத்தில் இருந்தும்

அகற்றப்படுகிறேன் ஆக்கிரமிப்பாலனாய்

என்ன சொல்ல நான்...

உன் தவறுகளுக்கு நீ ஆயிரம்

காரணம் சொல்லலாம்

என் அன்பிற்கு என்ன சொல்ல நான்!

இருமடங்காய்

நான் உன் மீது காட்டும் அன்பு

இருமடங்காய் பெருகி திரும்ப

கிடைக்க நீ ஒன்றும்

வட்டிகடையோ வங்கியோ அல்ல

நான் ஒன்றும் பணத்தை விதைக்கவில்லை

என் மனதைத்தான் விதைக்கிறேன்

தோல்வி

தோல்வி ஒன்றும் புதிது

அல்ல எனக்கு

காதலில் தோற்பதை தவிர

நம் நட்பு

என் வாழ்வின் மறக்கமுடியா நாளில்

ஊசல் ஆடிகொண்டிருந்தது

நம் நடப்பு.......

காத்திருப்பு

உனக்காக நான் காத்திருக்கின்றேன்

எப்போதும் ஆனால் உன்னிடம் உள்ள

காத்திருப்போர் பட்டியலில்

கடைசியாய் நான்!...

Monday, July 28, 2008

ஆல மரமாய்...

ஒரு வருட நம் நேசம்

ஆல மரமாய் வளராமல்

மழையால் முளைத்த

காலனாய் மறைகின்றது.

வெறுக்கிறாய்

வேதனை படுத்துக்கின்றவர்கலையே

நீ நேசிக்கிறாய்!

ஆனால் நீ ஆனந்தமாய் இருக்க வேண்டும்

என்று நான் நினைப்பதால் என்னோவோ

நீ வெறுக்கிறாய்.

வாழ்ந்து கொண்டிருகிறாய்

நீ என்னை விட்டு விலகி சென்றலும்

நீ என்னை விட்டு மறந்து சென்றலும்

நீ என்னுள் வாழ்ந்து கொண்டிருகிறாய்

Monday, April 14, 2008

வரவு

நான் உன்னை வெறுத்து விலக வேண்டும் என்பதற்காக நீ என்னை வேதனை படுத்துவது என்னிடம் உனது கணக்கில் அன்பாகவே வரவு வைக்கபடுகிறது................

இச்சை

இரவில் உன்னுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசவேண்டும் என்று என் மனதின் ஆசையையும் கொச்சைப்படுத்துகின்றாய் இச்சை என்று...............

Sunday, April 13, 2008

காதல்

என்னை காதலித்த

யாரையும் நான்

காதலிக்கவில்லை நான்

காதலிபவல் என்னை

காதலிக்கவில்லை...

கண்களை பார்த்து

நீ சொல்லாத வார்த்தைகளையும்

நீ சொல்லாத துயரங்களையும்

புரிந்து கொள்வேன் அமைதியாய் உன்

ண்களை பார்த்து........

கண்ணீர்

தாயே இன்று உன்னை

கண்ணீர் சிந்த வைத்து விட்டேன்

என்றும் எனக்காக கண்ணீர் சிந்தும் நீ இன்று

எண்ணால் கண்ணீர் சிந்தினாய்

நீண்ட இரவு

இரவில் உன் தொலைபேசி அழைப்புக்காக

காத்திருக்கும் போது

தான் என் இரவுகள் மிக

நீண்டூ கொண்டே போகிறது..........

முதலும் முடிவும்

முதல் காதல்

முதல் முத்தம்

முதல் ஸ்பரிசம்

முதல் சம்பளம்

முதல் பரிசு

என் முதலும் முடிவும் நீ........ யா...?

வேதனை

சுவையை சுவைத்து உணர்தேன்

நட்பை பழகி உணர்தேன்
காதலை உன்னை காதலித்து உணர்தேன்

வேதனையும் வலியும் நீ என்னை பிரிந்த

போது தான் உணர்தேன.

தவறு

என் கவிதைகளை நீ

எனக்கு திரும்ப

அனுப்பி நான் மறுபடியும்

படிக்கும் போது தான்

உணர்கின்றேன்

கவிதை எழுதுவது

பெரும் தவறு என்று

பிரிவு

உன்னை பிரிய

மனமில்லை ஆனால் என்ன

பண்ண காலனும்

காலமும் தன்

நம்மை பிரிக்கின்றன...

Wednesday, February 13, 2008

என்னுள் தன்னம்பிக்கை வளர்தவள் நீ..........
முயற்சி திருவினையாகும் என்று எனக்கு உணர்த்தியவள் நீ............
இன்று நீ என்னையும் நேசிகின்றாய்.............
என் முயற்சியாள்.........