Monday, December 8, 2008

தாயே....!

தாயே....! நீ எனக்கு
பாலூட்டினாய்.....
தாலாட்டினாய்......
சீராட்டினாய்......
ஓவ்வெரு முறையும் நான் வெற்றி
படிகட்டுகளில் ஏற முயன்று
தோல்வி படிகளில் துவண்டு விழுந்தபோதெல்லாம்
உன் வேதனைகளை வெளிக்காட்டாமல் என்னை
கட்டி அனைத்து உச்சி முகர்ந்ததாலும்
இறைவனின் கருணையாலும்
என்னை வெற்றி பெற வைத்தாய் ...
உன்னைக் காப்பேன் என் உயிர் உள்ள வரை
கண்ணில் வைத்து இமைகளை போல்
இது நான் உனக்கு செய்யும்
கடமை மட்டும்மல்ல நீ எனக்காக
உன் ரத்தத்தை பாலாய் புகட்டிய
உன் தியாகத்திற்க்காவும்.....
உனக்கு பிடித்த உணவுகளை
எனக்காக நீ உண்ணாமல் ஒதுக்கியது போல்
இன்னும் பல இவற்றிக்கெல்லாம் நான் செய்வது
கடலில் கரைத்த பெருங்காயமாய் .....
இறைவா உன்னை இறைஞ்சுகின்றேன்
அவள் உயிர் உள்ளவரை என்னை உயிருடன் வாழ வை
வளமாய் நான் வாழ அல்ல அவளை வாழ வைக்க.........

2 comments:

Anonymous said...

தாயின் அருமை பெருமைகளை சொல்ல இதை விட வேறு வார்த்தைகள் இல்லை, அனைவரையும் மிஞ்சிவிட்டாய் நண்பா!

என்றும் அன்புடன்
உன் ராம்.

Anonymous said...

arumai.

ezhuthu pizhaigal thavirthaal innum arumaiyaai irukkum.